வந்து கலந்தனள் - என்
வாழ்வு புகுந்தனள்
நெஞ்சில் நிறைந்தனள் - என்
நினைவில் நிலைத்தனள்
அன்பு காட்டினள் - என்
ஆயுள் கூட்டினள்
கனவில் வந்தனள் - உயிர்
காதல் தந்தனள்
காலம் வசந்தமாய்
கடந்த நேரத்தில்.....
ஓர் நாள்...
கண்மணி தாமரை அவள்
கதறும் மனம் ஈந்து...
காற்றில் கலந்தனள் - என்
கண்ணில் மறைந்தனள்
இனியவள் எனக்கு
இனி அவள்?
யாரவள்?
கேள்விகள் கணைகளாய்
இதயம் துளைத்தன
ஊர் சிரித்தது
உலகம் பழித்தது - என்
ஆவி சலித்தது
நாட்கள் நகர்ந்தன
சரியும் என்னுயிர் கண்டு
பதில் தந்தன
"வந்து கலப்பதும்
வாழ்வு புகுவதும்
கண்ணில் மறைவதும் பின்
காற்றில் கரைவதும்
தேவதை இயல்பு"