வானமே இல்லையே.
வான்நிலா என்னாவது?
வருவதா போவதா
கேள்விகள் உண்டானது.
தீபமே இல்லையே.
திரிகளும் என்னாவது?
எரிவதா தணிவதா
கேள்விகள் உண்டானது.
வண்ணமே இல்லையே.
வானவில் என்னாவது?
வளைவதா கலைவதா
கேள்விகள் உண்டானது.
ஆழ்கடல் இல்லையே.
அலைகளும் என்னாவது?
அலைவதா மறைவதா
கேள்விகள் உண்டானது.
தேவியே இல்லையே.
கோவிலும் என்னாவது?
திறப்பதா அடைப்பதா
கேள்விகள் உண்டானது.
ஜீவனே இல்லையே.
தேகமும் என்னாவது?
வாழ்வதா வீழ்வதா
கேள்விகள் உண்டானது.
வாழ்வே!
இனி நீ
இல்லையே.
வாழ்வில்
இனி நான்
இல்லையே.
காதல் எனும்
வேதம் தினம்
பாடும் - என்
பாடலே.
வான்நிலா என்னாவது?
வருவதா போவதா
கேள்விகள் உண்டானது.
தீபமே இல்லையே.
திரிகளும் என்னாவது?
எரிவதா தணிவதா
கேள்விகள் உண்டானது.
வண்ணமே இல்லையே.
வானவில் என்னாவது?
வளைவதா கலைவதா
கேள்விகள் உண்டானது.
ஆழ்கடல் இல்லையே.
அலைகளும் என்னாவது?
அலைவதா மறைவதா
கேள்விகள் உண்டானது.
தேவியே இல்லையே.
கோவிலும் என்னாவது?
திறப்பதா அடைப்பதா
கேள்விகள் உண்டானது.
ஜீவனே இல்லையே.
தேகமும் என்னாவது?
வாழ்வதா வீழ்வதா
கேள்விகள் உண்டானது.
வாழ்வே!
இனி நீ
இல்லையே.
வாழ்வில்
இனி நான்
இல்லையே.
காதல் எனும்
வேதம் தினம்
பாடும் - என்
பாடலே.