November 26, 2014

முக்தி

பொன்மேகம் போல
மென்தேகம் கொண்டு
பெண்மேகம் நீயும்
நடக்க

வெண்மேகம் கரைந்து
வெகுவேகமாய் இறங்கி

உன்னை நனைத்து
உலகம் சலித்து

அடைகிறது
முக்தி.