July 8, 2014

காத்திருக்கும் கவிதை

எப்போது
நீ படிப்பாயோ
என்று

இதயம் படபடக்க
இமைகள் சடசடக்க
எதிர்ப்பார்ப்போடு
காத்திருக்கிறது

உன் பிறந்தநாளுக்காக
நான் எழுதிய
கவிதை.

என் உயிரிலிருந்து
வளர்ந்து நிற்கும்
பூவிதை.